
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் உறுதியான முடிவு!!!
பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தகுந்த நேரத்தில் இதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மற்றும் அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனியரசு என உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்த நாளில் ஜனாதிபதி மக்ரோன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, “ரஃபாவின் காட்சிகளைக் கண்டு நானும் மிகவும் வருத்தமடைவதாகவும் இதற்கான பதில் நடவடிக்கை அரசியல் ரீதியானதாக இருக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளமை குறிப்பித்தக்கது.