பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊடகங்களின் செய்தி அறிக்கைகளுக்கு அமைய, அந்நாட்டின் 8 பிராந்தியங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 82 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பாதிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தின் காரணமாக 148-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிவாரணப் பணிகள் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.








