மட்டக்களப்பில் 2008-ல் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பாக கைதாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், எதிர்வரும் ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் இராணுவ புலனாய்வு தகவலாளர்கள் என கூறப்படும் முகமது சிபான், முகமது சகீட் ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளையான் குறித்த கொலைகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








