13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 3.7 வீதம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்திய பிறகு புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எலக்ட்ரானிக் சிகரெட்டுகளில் பல்வேறு இரசாயனங்கள் இருப்பதாகவும் வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சன்ன டி சில்வா கூறியுள்ளார்.