வவுனியாவில் புகையிரதம் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் நேற்று(17) மாலை சென்ற புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது புகையிரதக் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.