யாழ் புங்குடுதீவில் உள்ள ஆலயத்தில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் நேற்றையதினம்(18) அங்கு கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டியவேளை குழிக்குள் இருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 1985 ஆம் ஆண்டு, நெடுந்தீவு குமுதினி படகில் கடற்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட இருவரது சடலங்கள் இப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் உரிய பகுப்பாய்வுகளுக்கு பின்னரே அதன் உண்மைத் தன்மை பற்றி உறுதியாக கூற முடியும் என சம்பந்தப்பட்ட தரப்புக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.