யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று (04) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பாளரை இடமாற்றம் கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் அவசர சிகிச்சை தவிர மற்ற மருத்துவ சேவைகளில் டாக்டர்கள் ஈடுபடுவதில்லை. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனிடையே சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சுமுகமான பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில்,
மருத்துவமனை பொறுப்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க சில மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும், அதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் துணைபோவதாகவும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (03) காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.