இலங்கை இராணுவத்தின் 61ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பு அவர், மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.