கட்டுமானத்துறையினர் மற்றும் (ஒன்லைனில்) இணையத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வோர் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். (ikman) இக்மன் மற்றும் ஃபேஸ்புக் மார்கெட்ப்ளேஸ் (Facebook Marketplace) போன்ற தளங்களில் நடக்கும் புதிய மோசடி குறித்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் எஸ்பெஸ்டர்ஸ் asbestos தகடுகள், சீமெந்து மற்றும் பிற கட்டுமான பொருட்களை சந்தை விலையை விட மிகக் குறைவான விலையில் விளம்பரம் செய்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அவற்றை வாடிக்கையாளர்,கொள்வனவு செய்ய தீர்மானித்த பின்னர், மோசடிக்காரர், வாடிக்கையாளர் பகுதியில் உள்ள உண்மையான ஹார்ட்வேர் கடையை தொடர்பு கொள்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த கடை மூலம் பொருட்களை வாடிக்கையாளரின் வீட்டிற்கோ அல்லது கட்டுமான தளத்திற்கோ அனுப்ப ஏற்பாடு செய்கிறார்.

பொருட்கள் சென்றடைந்ததும், மோசடிக்காரர் வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, தான் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறு கூறுகிறார் என தெரியவந்துள்ளது.

டெலிவரி சாரதியோ அல்லது ஹார்ட்வேர் உரிமையாளர்களோ பணம் கேட்கும்போதே வாடிக்கையாளருக்கு தான் ஏமாற்றப்பட்டமை தெரியவருகிறது.

எனவே இதனால் மோசடிக்காரருக்கு அனுப்பிய பணமும், பொருட்களும் இரண்டையும் இழக்க நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*பொலிஸாரின் ஆலோசனைகள்*

பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:

1. வீட்டிற்கு பொருட்கள் வந்தவுடன் இணையம் ஊடாக பணம் செலுத்துவதை தவிர்க்கவும்

2.டெலிவரி சாரதி அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரை நேரடியாக தொடர்பு கொண்டு பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்.

3. வங்கி பரிமாற்றம் செய்தால், குறித்த ஹார்ட்வேர் கடையின் பெயரில் உள்ள அதிகாரப்பூர்வ வங்கி கணக்கிற்கு மட்டுமே* பணம் அனுப்பவும்.

4. முடிந்தவரை நேரடியாக பணம் செலுத்தும் *Cash on Delivery* முறையை தேர்ந்தெடுக்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here