Tamil News Channel

புதிய கடவுச்சீட்டு முறையா??

passport

கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தடன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகும் கடவுசீட்டுகள் ஒரு வருடம் வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட E-கடவுச்சீட்டை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் புதிய கடவுசீட்டை E-கடவுச்சீட்டாக மாற்றிக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

புதிய E-பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts