Thursday, March 12, 2026

புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை..!

Must Read

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை(08.06) அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது.

‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது

அதன்படி பிற்பகல் 2:00 மணிக்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள், புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பொதுப் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights