Tamil News Channel

புதிய துணைவேந்தர் நியமனம்…

uni

வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா நேற்றைய தினம் (08.07) கடமைகளை பொறுப்பேற்றார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டபத்தில் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில் புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டார்.

மேலும் வவுனியா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், பீடாதிபதிகள்,  விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts