நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35இற்கும் மேற்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த இல்லங்களில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய இல்லங்கள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.