களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும்,
முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குழாய்களைப் பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.