
புதிய மின்சார சட்டமூலத்திற்கு சபாநாயகர் அங்கீகாரம் !
மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு நேற்று (27) பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, புதிய சட்டம் நேற்று (27) முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மின்சாரத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்காகவே இந்த முக்கியச் சட்டம் ஆகும்.
தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுதல் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை (PUCSL) தொழிற்துறை ஒழுங்குபடுத்துபவராக நியமித்தல் ஆகியவை சட்டமூலத்தின் முக்கிய விதிகளாகும்.
மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு 2007 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம் எண். 07ன் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களை உருவாக்கவும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.