Wednesday, March 11, 2026

புதிய வரி அறிமுகம்

Must Read

புதிய வரிகள் மற்றும் வரி அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய விமானப்படைத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

2025ஆம் ஆண்டில் புதிதாக செல்வ வரி ஒன்று அறவிடப்படும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் 80 சதவீதமானோருக்கு இந்த வரி தாக்கத்தை ஏற்படுத்தாது.

நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வரிகளை வசூலிப்பதற்காக புதிய வருவாய் அதிகார சபையொன்றை அமைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வழங்கப்படும்.

இந்த வரிகளின் மூலம் சிறிது காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சாதாரண மட்டத்திற்கு கொண்டுவர முடியும்.

குறைந்த பட்சம் நூற்றுக்கு 8 வீதம் என்ற மட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த வருடத்தின் பின்னர் நாட்டில் விரைவான வளர்ச்சி ஏற்படும்.

மிகவும் கடுமையான முடிவுகளை நான் எடுத்துவிட்டேன். எனினும் அனைவரது ஆதரவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights