July 8, 2025
புதிய வற் வரியை ஆதரிக்கும் : பந்துல குணவர்தன
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள் வர்த்தகம்

புதிய வற் வரியை ஆதரிக்கும் : பந்துல குணவர்தன

Jan 3, 2024

சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று(02) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

IMF  வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் எந்த அதிபர் நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

எமது நாடு பொருளாதாரமானது பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ளது.

 எரிபொருள், உரம், மருந்து, இரசாயனபொருட்கள்,  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம்.

 இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

2027 ஆம் ஆண்டு வரை அதாவது மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *