Tamil News Channel

புதுக்குடியிருப்பில் சந்தேக நபர்கள் அதிரடியாக கைது…!!

poothai

முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து யுக்திய சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் குறித்த சுற்றிவளைப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதுபல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, திறந்த பிடியாணை நபர்கள் இருவரும், காவல்துறையினரால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரும், 43 லீற்றர் கசிப்புடன் திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts