
புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்
கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட VAT வரி அதிகரிப்பு சட்டமூலமானது இன்று [01] அதிகாலை முதல் சட்டமாக்கப்பட்டது. இதனால் VAT வரியானது 18 வீதமாக உயர்ந்துள்ளது.
12 % ஆல் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 92ரக பெற்றோலின்விலை ரூபா 40 வினாலும் 95ரக பெற்றோல் விலை ரூபா 35 வினாலும் டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது.
மேலும், சமையல் எரிவாயுவின் விலை 16% ஆல் அதிகரிப்பதனால் 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 வால் அதிகரித்துள்ளது. அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், மற்றும் கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக SMART PHONE விலைகள் 35 % வீதம் அதிகரிக்கின்றது. அதாவது ரூபா100,000 மதிப்புள்ள SMART PHONE இன்று முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது.