புனித ஹஜ்ஜுப்பெருநாளினை இஸ்லாமிய மக்களால் கொண்டாடி வருவதுடன் தொழுகையிலும் பங்கெடுத்துள்ளனர்.
இவ் புனித ஹஜ்ஜுப்பெருநாளினை முன்னிட்டு யாழ் மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜு ப்பெருநாளின் தொழுகை நிகழ்வு இன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் காலை 06.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் புனித ஹஜ்ஜு ப்பெருநாளின் தொழுகையின் குப்தாபிரசங்கத்தினை, `புனித ஹஜ்ஜுப்பெருநாளின் மகிமை` என்னும் கருப்பெருளினை சிறப்புரையினை மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) தலைமையில் நடாத்தப்பட்டன
பெருநாள் திடல் தொழுகையில் யாழ் வாழ் முஸ்லிம்கள், தாய்மார்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் புனித ஹஜ்ஜு ப்பெருநாளின் தொழுகைகள் யாழ் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் நடாத்தப்பட்டன என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.