புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த இரண்டு இளைஞர்கள் மாட்டுடன் மோதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.

இச் சம்பவமானது நேற்று மாலை 6.30  மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி அதி வேகத்தில் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ் நிருபர்-லோஜன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here