எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது “சர்வஜன பலய” கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை மக்கள் தேசிய கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இதன்படி, ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவர் திலித் ஜயவீர மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் தியாகராசா விஷ்ணுகாந்தன் ஆகியோர் ‘சர்வஜன பலய’ கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (19) ம.ஜ.த. தலைமையகத்தில் கைச்சாத்திட்டனர்.