தற்போது சந்தையில் போலியான பலபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதிலும், சில பொருட்கள் பார்ப்பதற்கு உண்மையான பொருள் போன்றே இருக்கும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் அடிப்படையில் தான் போலியானது என கண்டுபிடிக்க முடிகின்றது.
உதாரணமாக, சந்தையில் இருக்கும் முந்திரிகளை உண்மையானதா? அல்லது போலியானதா? என்றே கண்டுபிடிக்க முடியாது. அந்தளவு உண்மையானது போன்றே செய்யப்பட்டிருக்கும்.
போலியான முட்டைகள் பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றதாம். அதிலிருக்கும் இரசாயன பொருட்களின் தாக்கங்களினால் உடலுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
அப்படியாயின் போலியான முட்டைகள் விற்பனை செய்வதால் என்னென்ன உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
போலியான முட்டையை கண்டுபிடிப்பது எப்படி?
1. சந்தையில் விற்கப்படும் பிளாஸ்டிக் முட்டைகள் பார்ப்பதற்கு உண்மையான முட்டைகள் போலவே இருக்கும். ஆனால் அதன் தன்மை மற்றும் அதிலிருந்து வரும் மணம் வித்தியாசமாக இருக்கும்.
2 முட்டையின் தன்மையை அதன் ஓடுகளை வைத்து அறியலாம். இயற்கையான ஓடுகள் கைகளால் எடுக்கும் பொழுது உணர முடியும். போலியான முட்டைகள் பார்ப்பதற்கு மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அப்படியான முட்டைகளை வாங்க வேண்டாம்.
3. உண்மையான முட்டைகள் வெள்ளை, பழுப்பு மற்றும் சில நேரங்களில் நீலம் அல்லது பச்சை போன்ற நிறங்களில் இருக்கும். முட்டைகள் அடுக்கி இருக்கும் பொழுது ஒரே மாதிரியாகவும் ஒரே நிறத்திலும் இருந்தால் அது போலியான முட்டையாக பார்க்கப்படுகின்றது.