நேற்றைய தினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒருதொகை மீட்கப்பட்டன.
இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று மீட்கப்பட்டன.
இருப்பினும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 3