பிரபல காற்பந்து தொடரான La-Liga சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் (Girona) ஜிரோனா அணி (Alaves) அலவெஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் (Artem Dovbyk) அடெம் டவ்பைகும், 42 ஆவது நிமிடத்தில் (Portu) பொர்டுவும் கோல்களை பெற்றனர்.
59 ஆவது நிமிடத்தில் (Girona) ஜிரோனா அணிக்கு கிடைத்த பெனால்டியை (Artem Dovbyk) அடெம் டவ்பைக் கோலாக மாற்றினார்.
இந்த வெற்றியுடன் (Girona) ஜிரோனா அணி புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தொடரின் நேற்றைய போட்டியில் (Villarreal) விலாரியல் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் (Real Madrid) ரியல் மெட்ரீட் அணி வீழ்த்தியது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் (Valencia) வெலன்சியா அணியும்(Rayo Vallecano) ரயோ வலேகனோ அணியும் மோதவுள்ளன.