நடைபெற்றுவரும் லா லீகா சுற்றுப் போட்டியின் இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது.
இதன் முதல் போட்டியில் மலோர்கா மற்றும் ஒசசுனா அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இதில் ஒசசுனா அணி சார்பாக பப்லோ இபானெஸ் மற்றும் ரௌல் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்றனர்.
மலோர்கா அணி சார்பாக M.நஸ்டாசிக், டானி ரொட்ரிகுயிஸ் மற்றும் அண்டோனியோ ரைல்லொ ஆகியோர் தலா ஒரு கோல்களைப் பெற்றனர்.
மற்றைய போட்டியில் ரியல் மெட்றீட் அணியும் அலவேஸ் அணியும் மோதின.
லுகாஸ் வேஷ்குயீஸ் இறுதி நேரத்தில் பெற்ற ஒரு கோலின் மூலம் ரியல் மெட்றீட் அணி இந்த போட்டியில் அலவேஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் ரியல் மெட்றீட் அணி புள்ளிப்பட்டியலில் முதலாவது நிலைக்கு முன்னேறியுள்ளது.