கிளிநொச்சி இரத்தினபுரத்தைச்சேர்ந்த ஓய்வு நிலை தொழில்நுட்பஉத்தியோகத்தர் சிவ.திருக்கேதீஸ்பன் அவர்கள் எழுதிய புழுதிக்கதைகள் அனுபவப்பகிர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.
இந் நிகழ்வானது கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நூல் வட்டக்கச்சி மண்ணின் பெருமையை குறிப்பிடுகிறது.
மாவட்ட சமுர்த்தி திணைக்கள பதில் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்-சிவகுமார் ,சின்யா மிஷன் கிளிநொச்சி வதிவிட ஆசாரி சிவேந்திர சாத்தானியா ,ஓய்வு நிலை அதிபர், ஆசிரியர்கள் ,பொது அமைப்புக்களைச்சேர்ந்தோர் ,கலைஞர்கள், ஊடகவியலாளர் ,என பலரும் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.