போதைப்பொருள் வியாபாரிகளான கனேமுல்ல சஞ்சீவ மற்றும் வெலே சுதா ஆகியோரின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் தொலைபேசி பாகங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (12) பூஸா சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய அதிகாரிகள் குழுவொன்று விசேட பிரிவு A பிரிவில் உள்ள 44, 38, 37 ஆகிய அறைகளில் அவசர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில் ஈடுபட்ட வேளையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான சஞ்சீவ குமார சமரத்ன மற்றும் கனேமுல்ல சஞ்சீவ, ஜி.டபிள்யூ. சமந்தகுமார எனப்படும் வெலே சுதா தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 வெள்ளை ஹேண்ட் ஃப்ரீ மற்றும் 1 C ரக கேபிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கைபேசி மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.