2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.
லக்னோ அணி சார்பாக குயிண்டன் டி கொக் (Quinton de Kock) 81 ஓட்டங்களையும் நிக்கொலஸ் பூரன் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் கிளன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) 2 விக்கட்டுக்களையும், யாஷ் தயால் (Yash Dayal), ரீஸ் டொப்லி (Reece Topley) மற்றும் மொஹம்மட் சிராஜ் (Mohammed Siraj) ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் பெங்களூரு சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 19.4 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
பெங்களூரு அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மஹிபால் லொம்ரோர் (Mahipal Lomror) 33 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
லக்னோ அணிக்கு மயங் யாதவ் (Mayank Yadav) 3 விக்கட்டுக்களையும், நவீன் உல் ஹக் (Naveen-ul-Haq) 2 விக்கட்டுக்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக லக்னோ வீரர் மயங் யாதவ் (Mayank Yadav) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் லக்னோ அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது நிலையில் உள்ளது.