கொழுப்பு கல்லீரல் பிரச்சினை பொதுவாக மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கே அதிகமாக உண்டாகும் என்கிற நிலை மாறி…
பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.!
பெண்களுக்கு உண்டாகும் கொழுப்பு கல்லீரல் நோயை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைப்பார்கள்.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேங்கும்போது அது, கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
நாளடைவில் இது கல்லீரலின் செயல்பாட்டையும் பாதிக்கும். குறிப்பாக வளர்சி மாற்றப் பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்யும்.
ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மெட்டபாலிசம் கோளாறுகளால் தான் பெண்களுக்கு அதிகமாக கல்லீரல் கொழுப்பு நோயை உண்டாக்கிறது.
பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருக்கும் போது அதீத உடல் சோர்வு உண்டாகும்.
இரவில் நன்றாக 10 மணி நேரம் வரை தூங்கினால் கூட, பகலில் தூக்கமாக வரும். எப்போதும் சோர்ந்து சோர்ந்து ஒரே இடத்தில் முடங்கிப் போய் உட்கார்ந்து விடுவார்கள். தூக்கக் கலக்கத்தோடே இருப்பார்கள்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருக்கும் போது பெண்களுக்கு அடிக்கடி வயிறு அசௌகரியம் மற்றும் கடுமையான வயிறு வலியும் உண்டாகும்.
குறிப்பாக வயிற்றின் மேல் பகுதியில் குறிப்பாக வலது பக்கத்தில் கடும் வலி இருந்தால் அது கொழுப்பு கல்லீரலின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் செயல்பாடு குறைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதன் அறிகுறி தான்.
மஞ்சள் காமாலையும் கொழுப்பு கல்லீரல் நோயின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். இதில் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது முக்கியமான அறிகுறியாகும்.