பியகம, மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர், பியகம- மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள் அவரது முறையற்ற காதலி என கூறப்படும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2