December 17, 2025
பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது ; அமைச்சர் கீதா குமாரசிங்க!
புதிய செய்திகள்

பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது ; அமைச்சர் கீதா குமாரசிங்க!

Aug 16, 2024

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இரண்டு தேரர்கள் உட்பட 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை. 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு வெற்றி பெற்றியிருந்தார்.

2005ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் போட்டியிடவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது என அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *