பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…!
களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (17.08) காலை திறக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புலத்சிங்கள பிரதேசத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 180 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, வெள்ள நீர் சூழ்ந்துள்ளமையினால் புலத்சிங்கள, பரகொடை, மொல்காவ ஆகிய வீதிகளில் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதால் மாற்று வழிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை வீழ்ச்சி மேலும் அதிகரித்தால் நீர்த்தேக்கத்தின் அதிகளவான நீர் வெளியேற்றப்படும் என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
![]()