தேயிலை, இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்குரிய நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன், மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.