November 18, 2025
பெரும் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

பெரும் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Sep 30, 2025

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், பெரும் அளவிலான ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிவர்தன வீதிப் பகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த 33 கிலோகிராம் 270 கிராம் ஏஸ், 408 கிராம் ஹெரோயின், 200 போதை மாத்திரைகள் மற்றும் 7,400 ஹெரோயின் (சரஸ்) துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான நபர் மட்டக்குளிய சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவரது பின்னணி குறித்து இடம்பெற்ற விசாரணையின் போது, அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர் என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது இவர், மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *