- கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பெரியவர்களாகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள்.
இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவும் இருப்பார்கள்.
- விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற அன்பு மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள்.
தாம் சிறுவயதில் பெற்ற அன்பையும், அரவணைப்பையும் இவர்கள் பெரியர்களனதும் பல மடங்காக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உன்னத குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் பெற்றோரின் மகிழ்ச்சியை தங்களின் உயிரை விட மேன்மையான விடயமாக நினைப்பார்கள்.
- சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பிறந்த நொடி முதலே, தங்களின் பெற்றோரின் பாசத்தால் ஈர்க்கப்படுகிள்றார்கள்.
இவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் தங்களின் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.
இவர்களை பொறுத்தவரையில் பெற்றோர் தான் அவர்களின் வலிமை தூண்கள் எனலாம். இவர்கள் தங்களின் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.