பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அவற்றின் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் பேக்கரி பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து முட்டையின் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.