பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார்.
தனியார் வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவரின் பேத்தி காயமின்றி தப்பியுள்ளதோடு, முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.