அத்கல, உலப்பனே பகுதியில்78 வயதுடைய மூதாட்டி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலைச் சம்பவம் நேற்றையதினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் தனது பேரன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
குடும்ப தகராறு காரணமாக பேரனின் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளில் இச் சம்பவம் நடந்தவேளை பேரன் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.
கொலையை செய்த 32 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2