July 14, 2025
பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் பலி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் பலி..!

Feb 23, 2024

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம்  (23) காலை பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த இளைஞன் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் யாழிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *