பதுளையில் பேருந்துக்குள் கணவனின் கத்துக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பதுளையில், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்குள்ளேயே இன்று (09) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த 32 வயதான மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கத்தியால் குத்திய சந்தேக நபரான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, குடும்பப் பிரச்சினையின் காரணமாக இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here