
பேருந்து விபத்தில் 45 பேர் பலி..!
தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவரே உயிர் பிழைத்துள்ளதோடு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போட்ஸ்வானாவின் தலைநகர் கபோரோனில் இருந்து மோரியா நகரில் ஈஸ்டர் வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
லிம்போபோ மாகாணத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் பேருந்து மோதி தீப்பிடித்துள்ளதுடன் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
மேலும் நேற்று மாலை வரை மீட்பு பணிகள் தொடர்ந்துள்ளதுடன் இறந்தவர்களில் சிலர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்தமை பெரும் சிக்கலாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.