கொழும்பு, – பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் இன்று (21) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் 19 பேர், மஹர சிறைச்சாலையில் 30 பேர், வாரியபொல சிறைச்சாலையில் 30 பேர் மற்றும் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து 28 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 2