பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,207 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
பொசன் தான சாலைகளை பரிசோதனைக்குட்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 9, 425 குளிர்பான தானசாலைகளும் 8,782 உணவுப் பொதி உள்ளிட்ட பல்வேறு உணவு வகை தான சாலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொசன் தானங்களை வழங்கியதன் பின்னர் அந்த இடங்களில் உள்ள கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post Views: 3