Tamil News Channel

பொட்டி பொட்டியாய் பணத்தை ஈர்க்க 12 ராசிகளுக்குமான ஆன்மீக பரிகாரங்கள்..!

25-67d15f253ab8d

பெரும்பாலும் பணம் சேருவதற்கு பொதுவான பரிகாரங்களை நாம் செய்வது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட ராசிக்கு எந்த பரிகாரங்களை செய்தால் பணம் சேரும் என்பது பலருக்கும் தெரியாத புதிர்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்ட பரிகாரங்களை நாம் செய்தால் கடனை வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்கள், கடனை திருப்பித் தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், என்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அடியோடு தீரும். அவை என்ன என்பதை பார்க்கலாம்.

மேஷம் செவ்வாய் அன்று சிவன் கோவிலுக்குச்சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.
ரிஷபம் தினமும் பசுவிற்கு வாழைப்பழம் வாங்கி கொடுக்க வேண்டும்.
மிதுனம் சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கைதுணி, தாம்பூலம், புடவை போன்ற மங்கள பொருட்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.
கடகம் பறவைகள் பசி தீர மொட்டைமாடியில் அல்லது பல்கனியில் அரிசி தண்ணீர் வைக்க வேண்டும்.
சிம்மம் இரவும் உறங்கும் போது தலைக்கு அருகில் ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து படுத்து விட்டு அந்த தண்ணீரை காலையில் செடிக்கு ஊற்ற வேண்டும்.
கன்னி கோவில் பசுவிற்கு வெல்லம் கலந்த கோதுமை மாவை சாப்பிட கொடுக்க வேண்டும்.
துலாம் திங்கட்கிழமை அன்று சிவன் கோவில் அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கி கொடுக்க வேண்டும்.
விருச்சிகம் முருகன் கோவிலுக்கு சஷ்டி திதியன்று அபிஷேகப்பொருட்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.
தனுசு தினமும் வீட்டில் தாமரை திரியிட்டு நெய் தீபம் ஏற்றி விஷ்ணு சஹஸ்ர நாமம் படித்து வர வேண்டும்.
மகரம் வெள்ளியன்று துளசி செடிக்கு நெய் தீபம் ஏற்றி திருமாலை வழிபட்டு வர வேண்டும்.
கும்பம் சனிக்கழமை சனி பகவானை எள் தீபம் ஏற்றி தவறாமல் வணங்கி வர வேண்டும்.
மீனம் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை இட்டு வழிபட வேண்டும்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts