எதிர்வரும், ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை அறிவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அவர் அமைச்சரவை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.