Tamil News Channel

பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் 63,145 பொலிஸ் அதிகாரிகள், 3200 விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தேவைக்கு ஏற்ப பொலிஸ் அதிகாரிகள் அகற்றப்படும் இடங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் இராணுவத்தினர் உட்பட 11,000 இராணுவத்தினர் மற்றும் 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளடங்குவதாக நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 3109 நடமாடும் ரோந்துப் படையினரும் 269 வீதித் தடைகளும் 241 கலவர எதிர்ப்புக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts