Tamil News Channel

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

grocery

தமிழ் சிங்கள புத்தாண்டை  முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வரும் சாத்தியம் காணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தகவல் பணிப்பாளர் அசேல பண்டார பொதுமக்களுக்கு எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் பேரம் பேசும் இடங்களில் காலாவதி திகதியை திருத்தம் செய்வதன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொருட்களின் தரத்தை ஆராயுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் விற்பனையாளர்களால் பதுக்கல், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை திருத்தப்பட்ட காலாவதி திகதிகளின் கீழ் விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுக்க தொடர் சோதனை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களை வாங்கும் போது இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தகவல் பணிப்பாளர் அசேல பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts