Tamil News Channel

பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.!

பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் முன்னெடுக்கப்பட்டது.

சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தொடக்கவுரையினை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆற்றினார். கருத்துரைகளை சட்டத்தரணி ந.சிறிகாந், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் ஆற்றினர்.

நிகழ்வில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான கே.சஜந்தன், து.ரவிகரன், இ.ஆனல்ட் ஆகியோரும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே .சிவஞானம் நாம் எவ்வாறான கருத்துக்களைக் கூறினாலும் மக்கள் புறக்கணிப்பதா என்ன செய்வது என தீர்மானிப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தல் செப் 17 தொடக்கம் இடம்பெறும் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் தொடர்பில் சாதக பாதக விடயங்கள் ஆராயப்படுகின்றது.

பொது வேட்பாளர் தொடர்பாக எனது பார்வையில் தமிழ் வேட்பாளர்களை எவ்வாறு அணுகுவது தொடர்பான விடயம் உள்ளது.

நாங்கள் பொது வேட்பாளருக்கு எதிரானவர்கள் அல்ல மக்கள் தீர்மானிக்கும் வகையில் கருத்துகளை சொல்கிறோம். மக்கள் இதனைத் தீர்மானிப்பார்கள் – என்றார்.

பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றிய போது பொது வேட்பாளன் விடயத்தை நான் ஆதரிக்கவில்லை
உலகில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்புகள் உள்ளன.

ஐனாதிபதி தேர்தலி்ல்   சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இரண்டில் ஒரு முடிவில் இருப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக எமது கருத்துக்களை அரசாங்கத்திற்கு கூறமுடியாது.

அரசியல் அமைப்பாக வேறு மதம் வேறு இதனை பெளத்தத்திற்கு முதலிடம் கொடுப்பது தவறு எனக்கூறினேன்.

தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த உடன்படவில்லை எமது எதிர்பைக் காட்டும் வகையிலான வாக்கினை எடுக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கில் உள்ள மொத்த வாக்குகளில் கணிசமான வாக்கினைப் பெறுபவராக இருக்க வேண்டும்.

2024 இல் பொது  வேட்பாளரை நிறுத்தினால் 2029 இலும் நிறுத்த போகிறோமா என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது  பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றுதான் என்று கூறியிருந்தார்.

வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் முன்னாள் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் உரையாற்றிய போது
எமது எல்லைகளில் பயங்கரமான திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. எப்படி தமிழ் மக்களை பாதுகாப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகளாக ஒன்று சேர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.

சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உரையாற்றிய போது தற்போது என்ன நடக்கிறது என மக்களுக்கு தெரிய வேண்டும் கலந்துரையாடலுக்கு அழைக்கும் போது வரவில்லை ஏன் ஒழித்து ஓடுகிறார்கள். கருத்து சொல்லாது தடுப்பது பாசிசவாதம்.

பொது நிலைப்பாடும் வாக்கெடுப்பும் என்பதனை நாம் 1951 ஆம் ஆண்டு பேச தொடங்கி விட்டோம்.

தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா புத்தகத்திலிருந்து சில வசனங்களையும் தெரிவித்திருந்தார்.

மேலும்  அரச கட்சிகள் அரச தலைவர்கள் செய்யும் வேலையை அரசியல்வாதிகள் தான் செய்ய வேண்டும். சிவில் சமூகம் செய்ய வேண்டிய வேலை அல்ல தேர்தல் என்பது முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வு அதை நாம் விட்டுவிட முடியாது.

நாம் விட்டு ஓடி விட மாட்டோம். ஆனால் இலகுவாக தூரோகிப்பட்டம் சூட்டுவார்கள். தமிழ் பொது வேட்பாளரை நியமித்தால் அதற்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்வோம். அதிலே எமக்கு பொறுப்புள்ளது. அவ்வாறு நிற்பது கோமாளிகள் செய்யும் வேலை என்று கூறினார்.
அதனூடாகத்தான் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts