பொலிஸ் உத்தியோகஸ்தர் எனகூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வரும் இரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் , சிவில் உடையணிந்து கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாள் அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளியாட்கள் சிலர் பொலிஸாரின் பெயரில் இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் அல்லது வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பொருட்களை திருடலாம் என்பதால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.